‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீட்டிற்குள் செல்லும் கழிவுநீர்
கும்பகோணம் கர்ண கொல்லை அருகே தெற்கு, வடக்கு, மேற்கு, ஆகிய தெருக்களில் கழிவுநீர் தொட்டி நிரம்பி சாலை அருகே உள்ள வீட்டிற்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாயை சீரமைக்கவும், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், கும்பகோணம்.
குவியும் குப்பைகள்
பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பண்ணவயல் சாலையில் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் மழையில் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-விவேகானந்தன், பட்டுக்கோட்டை.
ஆபத்தான மின் கம்பம்
பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செந்தலைவயல் கிராமத்தில் சுமார் தினமும் ஆயிர கணக்கான மக்கள் ஈசிஆர் செல்லும் சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மேலும் கடல்கரை சாயைலில் பல மீனவர்கள் செல்லும் பாதையில் எந்த நேரமும் கீழே விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்வது கிடையாது பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடி நவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தலை வயல்,பொதுமக்கள்.