இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-15 18:15 GMT
தோகைமலை
 தோகைமலை அருகே பரந்தாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25). கிட்டாச்சி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தாளியம்பட்டியை சேர்ந்த பழனியப்பன் மகள் சரண்யா (19) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் நேற்று மதியம் கணவர் வீட்டில் தனியாக இருந்த சரண்யா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரண்யாவின் தந்தை பழனியப்பன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யாவிற்கு திருமணமாகி 3 மாதமே ஆவதால் குளித்தலை ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்