நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு

Update: 2021-11-15 17:06 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகளில் 126 வார்டுகள் உள்ளன. உதயேந்திரம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் உள்ள 45 வார்டுகளுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முதல் நிலை சரிபார்த்தல் பணி முடிவடைந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற தேர்தலுக்கு தேவையான 490 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 980 பேலட் எந்திரங்கள் மற்றும் 5 சதவீத கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வன், நகராட்சி ஆணையர் ஏகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்