யானைகள் அட்டகாசம்; நெற்பயிர்கள் நாசம்
யானைகள் அட்டகாசம்; நெற்பயிர்கள் நாசம்
தேன்கனிக்கோட்டை, நவ.16-
தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை நடவடிக்கை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்குள் வந்துள்ளன. அந்த யானைகள் 3 கூட்டமாக பிரிந்து வனப்பகுதிக்குள் சுற்றி திரிகின்றன. இதில் 10 யானைகள் சேர்ந்த யானைக்கூட்டம் ஒன்று தேனிக்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு எஸ்.குருபட்டி பகுதியில் 3 யானைகள், ஆனந்த்பாபு என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்தன. அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிரை யானைகள் நாசம் செய்துள்ளன.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நேற்று காலை நெற்பயிர் நாசமடைந்துள்ளதை கண்ட ஆனந்த்பாபு தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சேதடைந்த பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பிடு வழங்குவதாக தெரிவித்தனர்.
தேன்கனிக்கோட்டை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.