கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு

தேவதானப்பட்டி பகுதியில் மாடுகளுக்கு காணை நோய் பாதிப்பு குறித்து கால்நடை மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Update: 2021-11-15 15:45 GMT
தேனி: 


தேவதானப்பட்டி பகுதியில் காமக்காபட்டி, அம்சாபுரம், முதலக்கம்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் காணை நோயினால் அதிக அளவில் மாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தகவலறிந்த தேனி மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு குழு உதவி இயக்குனர் கணபதி ராமன் தலைமையில் மருத்துவ குழுவினர் தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்தனர். 

பின்னர் அந்த பகுதிகளில் முகாம் நடத்தி, பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இந்த ரத்த மாதிரிகள் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பூசி மையத்திற்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கால்நடை மருத்துவ அதிகாரி கூறினார். 

மேலும் செய்திகள்