குரும்பூரில் பள்ளி மாணவி கார் மோதி பலியானார்

குரும்பூரில் பள்ளி மாணவி கார் மோதி பலியானார்

Update: 2021-11-15 13:20 GMT
தென்திருப்பேரை:
குரும்பூர் சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகள் சக்தி சுவாதி (வயது 8). கீழநாலுமாவடியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். குரும்பூரில் உள்ள திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது நெல்லையிலிருந்து ஆறுமுகநேரிக்கு சென்று கொண்டிருந்த கார் மாணவி சக்தி சுவாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவள் மீது அந்த வழியாக சென்ற பைக் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சக்தி சுவாதியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் காரை ஓட்டி வந்த ஆறுமுகநேரி கானியாளர் தெருவை சேர்ந்த சாமுவேல் ஞானராஜ் மகன் அம்புரோஸ் டேவிட் பிராங்கோ (36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்