கிண்டி கத்திப்பாராவில் நேரு உருவ படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை
ஜவஹர்லால் நேருவின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள நேருவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன், மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், முத்தழகன், ரஞ்சன்குமார், மாவட்ட துணை தலைவர் அய்யம் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகளும் நேரு உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.