அம்பத்தூர் கோர்ட்டு வளாகத்தில் மரத்தில் தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை

கோவிந்தசாமி அம்பத்தூர் கோர்ட்டில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கோர்ட்டு வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-15 13:09 GMT
வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 56). இவர் அம்பத்தூர் கோர்ட்டில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு வந்த கோவிந்தசாமி, கோர்ட்டு வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். அதில், “குடும்ப செலவுக்கு வாங்கிய கடன் தொல்லையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மகனுக்கு அரசு சார்பில் நல்ல வேலை வழங்க வேண்டும்” என கூறி இருந்தார். இதுபற்றி அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னை ஓட்டேரியை அடுத்த சிவகாமிபுரம் பகுதியில் 2 மகள்களுடன் வசித்து வந்த சரசு (55) என்பவரும் கடன் தொல்லையால் வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்