பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே நடத்திய ஆா்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

Update: 2021-11-15 11:17 GMT
சிவகங்கை, 
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே நடத்திய ஆா்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
பட்டா
சிவகங்கை பழமலைநகர், தேவகோட்டை சமத்துவபுரம், திருப்பத்தூர் கல்லுவெட்டிமேடு, காரைக்குடி கழனிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவ இன மக்கள் அனைவரையும் பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசு வீடுகள் கட்டிக்கொடுத்து பட்டா வழங்க வேண்டும் என்புது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி  சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு திருப்பத்தூர் சாலையில் கண்டன ஆா்பாட்டம் நடத்தினர்.
 இந்த போராட்டத்தில் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமா வர்கள் கலந்து கொண்டனர் அப்போது அந்தவழியாக சென்ற சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணா கரன், மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, சிவகங்கை நகர் அ.தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் அ.தி.மு.க.வினர் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
நடவடிக்கை
 இதைத்தொடர்நது ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை செந்தில்நாதன் எம்.எல்.ஏ.விடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்