கந்தம்பாளையம் அருகே கார் மோதி விவசாயி சாவு
கந்தம்பாளையம் அருகே கார் மோதி விவசாயி சாவு
கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மாதேசம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 70). விவசாயி. இவர் சம்பவத்தன்று மொபட்டில் வசந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே தார்சாலையை கடக்க முயன்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று ரங்கசாமி ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.