கோரையாற்றில் சிக்கிய முதலை குட்டியால் பரபரப்பு
கோரையாற்றில் சிக்கிய முதலை குட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே எம்.ஜி.ஆர்.நகரில் கோரையாற்று பகுதியில் இளைஞர்கள் சிலர் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோரையாற்று கரையில் முதலை குட்டி ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர்கள் அதை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே திருச்சியில் உய்யகொண்டான் வாய்க்காலில் முதலை நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பீதி கிளம்பி வரும் நிலையில், தற்போது, கோரையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.