தினத்தந்தி புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குைறகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகன ஓட்டிகள் சிரமம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் என்.என்.பார்க் தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கல்லல் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவ்வழியாக நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளனர். வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைப்பார்களா?
சுப்பிரமணி, கல்லல்.
செய்தி எதிரொலி
மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை செல்லும் சாலையில் உள்ள பாதாள சாக்கடையின் மேல் மூடி உடைந்து காணப்பட்டது. அதன் கம்பிகள் ெவளியே நீட்டிக் கொண்டிருந்தது. இதனால் விபத்து அபாயம் ஏற்படும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பாதாள சாக்கடை மேல்மூடி சரிசெய்து மூடப்பட்டு விட்டது. தினத்தந்திக்கு நன்றி. சிவா, மதுரை.
போக்குவரத்து நெரிசல்
சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரமாக விளங்கும் திருப்புவனத்தில் பஸ் நிலையம் இல்லை. இதன் காரணமாக நகரின் மையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகள் அனைவரும் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையம் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கிருஷ்ணவேணி. சிலைமான்.
மாற்று கட்டிடம் வேண்டும்
மதுரை மாவட்டம் பரவையில் அங்கன்வாடி மையத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. அது எப்போது விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளதால், நூலகத்திற்கு மாற்று கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டும்.
காந்திபாஸ்கரன், பரவை.
பஸ்கள் இயக்கப்படுமா?
மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் தெப்பக்குளம், தெற்குவாசல் வழியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இவ்வழித்தடத்தில் இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?
சிவகுமார், மதுரை.
குடிநீர் பிரச்சினை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சிங்கபுலியாபட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. குடிநீர் பிரச்சிைன குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நாகநாதன், கமுதி.
புழுதி பறக்கும் சாலை
மதுரை ஆரப்பாளையம் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்து அபாயமும் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆரப்பாளையம்.