நகை பறித்த தொழிலாளி கைது
அருப்புக்கோட்டையில் நகை பறித்த ெதாழிலாளிைய போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் காசிராஜன். மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று மதிய உணவு இடைவெளியின் போது அறுவைமில்லில் காசிராஜனின் தாய் கோமதியம்மாள் (வயது 74) மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அறுவைமில்லின் பின்புறம் இருந்து ஹெல்மெட் அணிந்து உள்ளே நுழைந்த மர்மநபர் கோமதியம்மாளை தாக்கி அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா தலைமையிலான போலீசார் கண்காட்சி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சந்தேகத்தின் பேரில் அறுவை மில்லில் பணிபுரிந்து வந்த சிவகாசியை சேர்ந்த கருத்தபாண்டி (37) என்பவரை தேடி வந்தனர். இந்தநிலையில் சுக்கிலநத்தம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த கருத்தபாண்டியை பிடித்து விசாரணை நடத்தியதில் கோமதியம்மாளை தாக்கி நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 பவுன் தங்க நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.