51,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த முகாமில் 51,440 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 14 ஆயிரத்து 30 பேருக்கு முதல் தவணைத்தடுப்பூசியும் 37 ஆயிரத்து 410 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி ஆக மொத்தம் 51 ஆயிரத்து 440 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 17 லட்சத்து 25 ஆயிரத்து 466 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.