அன்னவாசல் பெரியகுளம் நிரம்பியது: இளைஞா்கள் கேக் வெட்டி கொண்டாடினர் பள்ளத்தில் வேன் சிக்கியது
இளைஞா்கள் கேக் வெட்டி கொண்டாடினர்
அன்னவாசல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பல இடங்களில் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் கண்மாய்கள் நிரம்பி விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் வரத்து வாரி சரியாக இல்லாததால் குளம் நிரம்ப வில்லை. இந்த நிலையில் அன்னவாசல் பெரியகுளம் 10 வருடத்திற்கு பின்பு நிரம்பி உபரிநீர் வெளியேறி செல்கிறது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னவாசல் பெரிய குளத்தில் அப்பகுதியை சேந்த இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் தண்ணீரில் இறங்கி கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று செங்கப்பட்டியில் முக்கண்ணாமலைப்பட்டி புதூர் செல்லும் சாலையில் உள்ள குறுஞ்சான்குளம் உடைப்பு ஏற்பட்டு சாலையின் குறுக்கே தண்ணீர் செல்கிறது. இந்த சாலைவழியாக சென்ற வேன் ஒன்று தண்ணீரில் சிக்கி பள்ளத்தில் சாய்ந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கயிறுகட்டி மீட்கப்பட்டது. தண்ணீர் செல்லும் பகுதிகளில் சிறுவர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.