அரிசி கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
அரிசி கடையில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவர் குளித்தலை பகுதியில் கடந்த 4 வருடமாக அரிசி கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று இவர் தனது கடையில் உள்ள அரிசி மூட்டைகளை எண்ணிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது கடையில் உள்ள மேஜை திறக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்க்கும் போது குளித்தலை கொடிக்கால் தெருவை சேர்ந்த முனியப்பன் (24) என்பவர் அரிசி கடையில் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 ஆயிரத்து 640-ஐ திருடி கொண்டு வெளியே சென்றுள்ளார். இதைப்பார்த்த சுதாகர் மற்றும் அங்கிருந்தவர்கள் முனியப்பனை கையும் களவுமாக பிடித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த குளித்தலை போலீசார் பணத்தை திருடிய முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.