திருட்டு போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருட்டு போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் திருட்டு போன ரூ.13 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். இந்தநிலையில் அந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலந்து கொண்டு திருட்டுபோன செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், செல்போன்கள் தொலைந்தால் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.