ரெயில் மோதி துப்புரவு தொழிலாளி பலி

ரெயில் மோதி துப்புரவு தொழிலாளி பலியானார்.

Update: 2021-11-14 15:36 GMT

சின்னாளப்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஜாதிக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவர், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை இவர், ஊருக்கு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயில் பெருமாள் மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் அடிபட்இந்த பெருமாளுக்கு ஜோதிமணி (35) என்ற மனைவியும், கிருத்திகாஸ்ரீ (9), ராணி (6) என 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்