தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-14 13:11 GMT
 குண்டும் குழியுமான சாலை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- செட்டியப்பனூர் இடையே உள்ள ஏரிக்கரையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஏரிக்கு ெசல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது ஏரி நிரம்பி டாஸ்மாக் கடைகளின் அருகிலேயே தண்ணீர் தேங்கி உள்ளது. குடிபோதையில் இருப்போர் கை, கால்களை கழுவ ஏரிக்கு செல்லும்போது, தள்ளாடி தவறி ஏரி தண்ணீருக்குள் விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், வாணியம்பாடி.  

சாலை உள்பட அடிப்படை வசதிகள் தேவை

திருவண்ணாமலை நகராட்சி வ.உ.சி. 2-வது தெருவில் வசித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தெருவில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதியை அதிகாரிகள் செய்து தரவில்லை. ஆனால் கழிவுநீர் கால்வாயை பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளனர். எங்கள் தெருவுக்கு அடிப்படை வசதியாக சாலை, கழிவுநீர் கால்வாய் வசதியை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.
-ஆர்.நாராயணன், திருவண்ணாமலை.

மின்வழிப்பாதையை மாற்றி அமைக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா கொங்கராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கேட்குடியிருப்பு பகுதி வீனஸ் நகரில் ஏராளமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள மின்சார கம்பிகள் ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவுக்கு வீட்டின் மேல் வழியாக கைக்கு எட்டும் தூரத்தில் செல்கிறது. இதன் மூலம் எந்த நேரத்திலும் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்வழிப்பாதையை மாற்றி அமைக்க வேண்டும்.
-ப.ஏழுமலை, கொங்கராம்பட்டு. 

 ஏரியின் தடுப்புச்சுவரில் உடைப்பு

குடியாத்தம் தாலுகா வளத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரி நிரம்பி கோடி போகிறது. ஏரியையொட்டி உள்ள சாலையோரம் இருக்கிற தடுப்புச்சுவர் உடைந்து அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகிக்கொண்டிருக்கிறது. அந்தத் தண்ணீரால் பயிர்கள் நாசமாகிறது. உடைந்த ஏரியின் தடுப்புச்சுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிக்கொடுத்து பயிர்கள் நாசமாவதை தடுத்து பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
-கே.விமல்ராஜ், வளத்தூர்.

மேலும் செய்திகள்