போளூர் ஜமுனாமரத்தூர் சாலையில் மண்சரிவு

தொடர் மழையால் போளூர் ஜமுனாமரத்தூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.

Update: 2021-11-14 12:51 GMT
போளூர்

தொடர் மழையால் போளூர் ஜமுனாமரத்தூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.

போளூரில் இருந்து ஜமுனாமரத்தூர் 43 கிலோமீட்டர் தொலையில் உள்ளது.

 தொடர் மழை காரணமாக இன்று காலை போளூரில் இருந்து ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் திடீரென 20 கிலோமீட்டர். இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. 

இதனால் பாறைகள், மரங்கள் வேரோடு முறிந்து சாலையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. 

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதையறிந்த நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி தலைமையில் உதவி செயற்பொறியாளர் வேதவள்ளி மற்றும் பணியாளர்கள் கொட்டும் மழையில் பொக்லைன் எந்திரம் மூலம் பாறைகள், மரங்கள், மண் போன்றனவற்றை அகற்றி சாலை சீரமைப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்