கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
பேராவூரணி அருேக கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார். இவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் அன்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பேராவூரணி;
பேராவூரணி அருேக கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார். இவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் அன்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உடல் நலக்குறைவு
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பாங்கிரான்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் குப்பமுத்து (வயது90). இவருடைய மனைவி பவளக்கொடி(88). இவர்களுக்கு மகேஸ்வரன், நாகராஜ் என இரு மகன்களும் பேரக்குழந்தைகளும் உள்ளனர். வாழ்வில் இணை பிரியாமல் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாக குப்பமுத்து- பவளக்கொடி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த பலத்த மழையால் குப்பமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை குப்பமுத்து திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பவளக்கொடி மற்றும் உறவினர்கள் குப்பமுத்துவின் உடலை கண்டு கதறி அழுதனர். பின்னர் அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர்.
பரிதாப சாவு
இந்த நிலையில் கணவரின் பிரிவை தாங்காமல் அழுதுகொண்டிருந்த பவளக்கொடி அன்று இரவே திடீெரன மயங்கி விழுந்து இறந்தார்.
இதைத்தொடர்ந்து கணவன்- மனைவி இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யபபட்டது. வாழ்வில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இறப்பிலும் இணைபிரியாமல் உயிரை விட்ட தம்பதியின் அன்பு அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.