கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் கைது

கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் கைது

Update: 2021-11-13 19:33 GMT
திருச்சி, நவ.14-
திருச்சி பாலக்கரை அரசமர பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் கஞ்சா விற்கப்படுவதாக திருச்சி காந்திமார்க்கெட் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ‌அதன்பேரில் நேற்று காலை தனிப்படை போலீசாருடன் அதிரடியாக ஆட்டோ நிறுத்தத்தில் உதவி போலீஸ் கமிஷனர் சோதனை நடத்தினார். அப்போது திருச்சி ஏர்போர்ட் காவிரி நகர் பகுதியை சேர்ந்த ராஜாமுகமதுவின் ஆட்டோவில் 1¼ கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் ராஜாமுகமதுவை கைது செய்த போலீசார் 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்