குருப்பெயர்ச்சியையொட்டி தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-11-13 18:52 GMT
தர்மபுரி:
தர்மபுரி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சி விழா
குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை 6.20 மணிக்கு பெயர்ச்சி ஆனார். இந்த குருப்பெயர்ச்சியையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அந்தந்த கோவில்களில் சிறப்பு யாக சாலை பூஜைகள் மற்றும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவில்களில் மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளை சேர்ந்தவர்கள் பரிகார பூஜை செய்து கொண்டனர்.
சிறப்பு யாகம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி கணபதி ஓமம், நட்சத்திரம்- ராசிகளுக்கான ஹோமம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ வினாதார தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு கலச அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள குரு பகவானுக்கு குருபெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவரவர் ராசிக்கேற்ப பரிகார பூஜைகள் செய்து கொண்டனர். 
இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அன்னசாகரம் சிவசுப்ரமணிய சாமி கோவில், அப்பாவு நகர் விநாயகர் கோவில், எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்