கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.

Update: 2021-11-13 17:35 GMT
தூத்துக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வாலிநோக்கம் கிராமத்தைச் சேர்ந்த முகைதீன் முஸ்தபா மகன் அப்துல் மஜித் (வயது 42). இவர் தூத்துக்குடி தருவைகுளத்தில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் பொன்னரசு என்பவருக்கு சொந்தமான படகில் அப்துல் மஜித் உள்பட 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அப்துல் மஜித் எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்தார்.
இதையடுத்து உடன் சென்ற மீனவர்கள் தூத்துக்குடி மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை தருவைகுளம் கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்