சங்கரதாஸ் சாமிகள் நினைவு தினம்

சங்கரதாஸ் சாமிகள் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர்.

Update: 2021-11-13 17:28 GMT
புதுச்சேரி, நவ.
சங்கரதாஸ் சாமிகள் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர்.
ஊர்வலம்
நாடக தந்தை சங்கரதாஸ் சாமிகளின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை கருவடிக்குப்பம் இடுகாட்டில் உள்ள சங்கரதாஸ் சாமிகளின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் ஊர்வலமாக புதுவை காந்தி வீதியில் இருந்து சங்கரதாஸ் சாமிகள் நினைவு இடத்துக்கு சென்றனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்து இருந்தனர்.
சிலம்பாட்டம்
மேலும் தப்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து கலைஞர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்  திரைப்பட கலைஞர்கள் மற்றும் தமிழகம், புதுவையை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் கலந்துகொண்டனர். புதுவை நாடகக்கலைஞர்கள் பொதுநல கூட்டமைப்பினர் கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக சென்று சங்கரதாஸ் சாமிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் பாண்டீஸ்வரன், கவுரவ தலைவர் கண்ணன், நெல்லை ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்