உளுந்தூர்பேட்டை அருகே சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம்

உளுந்தூர்பேட்டை அருகே சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம்

Update: 2021-11-13 17:08 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை மற்றம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான ஏரி, குளங்கள் மற்றும் சிறிய அளவிலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளன. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். வயலில் புகுந்த தண்ணீரை வரப்புகளை வெட்டி  வெளியேற்றிய விவசாயிகள் தற்போது டிராக்டர் மூலம் நிலங்களை உழுது சமன் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நாற்று நடவும் பணியில் ஈடுபட உள்ளனர். 

மேலும் செய்திகள்