கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் இறங்கிய ஆம்புலன்ஸ்

கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் இறங்கிய ஆம்புலன்ஸ்

Update: 2021-11-13 16:58 GMT
செங்கம்

செங்கம் பகுதியில் இருந்து 2 நோயாளிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணைக்கு இன்று அதிகாலை 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. 

செங்கம் அருகே தானகவுண்டன்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அம்புலன்ஸ் சாலையோரம் இருந்த ஓடைக்குள் இறங்கி விபத்துக்குள்ளானது. 

இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டனர். 

மேலும் செய்திகள்