மேல்மலையனூர் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 போ் கைது

மேல்மலையனூர் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2021-11-13 16:12 GMT
மேல்மலையனூர், 
மேல்மலையனூர் அருகே வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பென்னகர் கிராமத்தில் 5 பேர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று 3 பேரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 

இதையடுத்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், பென்னகர் கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 31), ராஜா (26), விஜயகுமார் (25) என்பது தெரியவந்தது. பின்னர் பாண்டியராஜன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜதுரை, அருண்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்