பள்ளிபாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

பள்ளிபாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

Update: 2021-11-13 16:08 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). டிரைவர். இவருடைய மனைவி தெய்வானை (44). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறாள். 
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக 2-வது மகள் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் தெய்வானை மகளின் கல்வி நிலையை எண்ணி வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடியில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். 
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தெய்வானை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்