1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 16 லட்சத்து 70 ஆயிரத்து 289 பேர் முதல் தவணையும், 6 லட்சத்து 35 ஆயிரத்து 290 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இன்னும் 3 லட்சத்து 25 ஆயிரத்து 11 பேருக்கு முதல் தவணையும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 84 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.
8-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் நடக்கிறது. 587 நிலையான முகாம்கள், 80 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 667 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடி, தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த பணியில் பல்வேறு துறையை சேர்ந்த 2 ஆயிரத்து 968 பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார