நகர்புற உள்ளாட்சி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு
நகர்புற உள்ளாட்சி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு
கோவை
கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக வளா கத்தில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.
இதில் கோவை மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிக ளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தலுக்கு மொத்தம் 6,618 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது வரை 3,332 எந்திரங்கள் வந்துள்ளன.
இதில் 5 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் தனியார் நிறுவன என்ஜினியர்கள் 10 பேர் பங்கேற்று வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்தனர்.
இந்த மாதிரி வாக்குப்பதிவை மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.