இன்றும், நாளையும் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைப்பு
இன்றும், நாளையும் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் மண்டலம் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்பட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருந்தன.
இந்தநிலையில் சென்னையில் ஏற்பட்ட தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாலும், பொதுமக்களின் நலன் கருதி மேற்படி தேதிகளில் நடைபெற இருந்த முகாம்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.