பெண்ணாடத்தில் மின்சாரம் பாய்ந்து தி.மு.க. பிரமுகர் பலி

போலீசார் விசாரணை

Update: 2021-11-13 04:48 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த அரியராவி கிராமத்தை சேர்ந்தவர் தனவேல் (வயது 65). தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி. இவர் பெண்ணாடம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு வேலைக்கு சென்றிருந்தார். அப்போது பள்ளியின் மேல்தளத்தில் இரும்பு ஏணி மூலம் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, கட்டிடத்தை ஒட்டி இருந்த மின்கம்பத்தில் ஏணி சாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் தனவேல் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு தனவேலை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்