திருச்சி, நவ.13-
திருச்சி மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 77,949 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 368பேர் உள்ளனர். 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 76,517 ஆகும். கொரோனாவுக்கு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 87 வயது மூதாட்டி, 71 வயது மூதாட்டி என 2 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,064 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,714 பேருக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ளகோரையாற்றை ஒட்டி உள்ள தீரன்நகர் ரோகினி கேட்வே அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அக்குடியிருப்பில் தகரம் தடுப்பு வைத்து மாநகராட்சி நிர்வாகம் அடைத்து உள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் தூய்மைப்பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டது.