இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-12 19:05 GMT
கரூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலையை கண்டித்தும்,  கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினம் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர்கள் சண்முகம், மோகன்குமார், நகர செயலாளர் நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் குளித்தலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் பாலன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்