கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்ய ஏற்பாடு

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு ஏதுவாக கூட்டுறவு சங்கங்கள் இன்றும், நாளையும் செயல்படும்.

Update: 2021-11-12 19:03 GMT
சிவகங்கை,

சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் நடப்பாண்டு 2021-22-ம் ஆண்டு பருவத்திற்குரிய அனைத்து விவசாயிகளும் (கடன் பெற்றோர் மற்றும் பெறாதவர்கள்) பயிர்காப்பீடு செய்வதற்கு ஏதுவாக அதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட கடைசி நாள் வருகிற 15-ந்தேதி. இந்த நாளுக்குள் திட்டத்தில் சேர்ந்து பயனடையும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்படும் பொது சேவை மையங்கள், வங்கி விடுமுறை நாட்களாக உள்ள இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் செயல்படும். எனவே இந்த 2 நாட்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்காப்பீட்டு பீரிமிய தொகை பெற்றுக்கொள்ளப்படும். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
 இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்