வீட்டின் ஒடுகளை பிரித்து 27 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

பூவந்தி அருகே வீட்டின் ஒடுகளை பிரித்து 27 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடு போனது.

Update: 2021-11-12 18:28 GMT
திருப்புவனம்,
-
பூவந்தி அருகே உள்ள கிளாதிரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). விவசாயி. மாடுகளையும் மேய்த்து வருகிறார். தினமும் காலையில் குடும்பத்துடன் மாடுமேய்க்க சென்றுவிட்டு மாலையில் தான் வீடு திரும்புவார்களாம். சம்பவத்தன்று மாடு மேய்க்க சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் மேல் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த ேபாது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 27 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் அதை திருடி சென்று இருக்கிறார்கள்.இதுகுறித்து அய்யனார் பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்