மேல்விஷாரம் பகுதியில்தொடர் மழையால் வீடு இடிந்து சேதம்
தொடர் மழையால் வீடு இடிந்து சேதம்
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் மேல்விஷாரம் பிரான்சாமேடு பகுதியில் வசித்து வரும் இந்திரா என்பவரின் குடிசை வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
வீட்டின் சுவர் இடிந்ததால் பாதிக்கப்பட்ட அவர், தனக்கு தமிழக அரசின் வெள்ள நிவாரண உதவிகளை வருவாய்த்துறையினர் வழங்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.