சங்கராபுரம் அருகே சாலை வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்
சங்கராபுரம் அருகே சாலை வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் 7 மற்றும் 12-வது வார்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகளில் சிமெண்ட்சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி செய்துதரக்கோரி பூட்டை மேட்டுத்தெரு, பஸ் நிறுத்தம் அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாகொளஞ்சியப்பன், ஊராட்சி செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதனால் சங்கராபுரம் - பாலப்பட்டு சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.