கல்லால் அடித்து வாலிபர் படுகொலை

நாகையில், டாஸ்மாக் கடையில் மது வாங்கியபோது ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2021-11-12 16:29 GMT
வெளிப்பாளையம்:
நாகையில், டாஸ்மாக் கடையில் மது வாங்கியபோது ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
கல்லால் தாக்கி கொலை
நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மாரியப்பன்(வயது25). கூலித்தொழிலாளி. இவர், நேற்று மருந்து கொத்தளரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்று உள்ளார். 
அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அங்கு கீழே கிடந்த கல்லை எடுத்து மாரியப்பனை தாக்கினர். இதில் முகம் சிதைந்து மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரியப்பனின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கொலை செய்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் மது வாங்கிய போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்