காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
மாடம்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 35 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார். அவருடன் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஊராட்சி செயலர் மொய்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.