வரதராஜபுரம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்பு

வரதராஜபுரம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

Update: 2021-11-12 06:35 GMT
படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பி.டி.சி. குடியிருப்பு, பரத்வாஜ்நகர் கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். அவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். இதனை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டார். 

அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், சீனிவாசன், வரதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்