ரூ.30 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; 3 பேர் கைது

ரூ.30 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-11 19:52 GMT
செங்கோட்டை:

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து சோதனை செய்தனர்.

இதில் கேரள மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 66), முருகன் (58), விருதுநகர் மாவட்டம் வையாபுரியைச் சேர்ந்த மற்றொரு முருகன் (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்