தக்கோலம் திருவாலாங்காடு இடைேய தற்காலிக தார் சாலை துண்டிப்பு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தக்கோலம்-திருவாலாங்காடு இடைேய ஆற்றின் குறுக்கே போடப்பட்ட தற்காலிக தார் சாலை துண்டிக்கப்பட்டது.

Update: 2021-11-11 18:29 GMT
அரக்கோணம்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தக்கோலம்-திருவாலாங்காடு இடைேய ஆற்றின் குறுக்கே போடப்பட்ட தற்காலிக தார் சாலை துண்டிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளம்

அரக்கோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்தசில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வளாகம் அருகே தக்கோலம்-திருவாலாங்காடு வழியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர் மட்டப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 

இதற்காக, அதன் அருகில் ஆற்றின் குறுக்ேக தற்காலிக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் சமீப காலமாக போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியை சென்றடைகிறது.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தற்காலிக தார்சாலையை மூழ்கடித்து தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இதனால் தார் சாலையில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தற்காலிக தார் சாலையை பார்வையிட்டார். 
அதில் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் சாலையின் இரு பக்கமும் தடுப்புகள் அமைக்க ஊழியர்களிடமும், போலீசாரிடமும் கூறினார். அதன்பேரில் தக்கோலம் போலீசார் விரைந்து வந்து, தற்காலிக தார் சாலையின் இரு பக்கமும் ெபரிய கற்களை தடுப்பாக வைத்து, போக்குவரத்தைத் துண்டித்துள்ளனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கொசஸ்தலை ஆற்றின் இருபக்க கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் யாரும் தற்காலிக தார் சாலையில் பயணிக்க வேண்டாம் என தண்டோரப்போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக, தாசில்தார் தெரிவித்தார்.

தற்காலிக தார் சாலை மற்றும் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டதால் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்