லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
தனியார் நிறுவன ஊழியர் பலி
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் ஐபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 56), சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். இவரது மருமகன் குணசேகர் (36) என்பவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவரை, வேலு மோட்டார்சைக்கிளில் சோளிங்கர் அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுபடியும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அரியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேலு அதே இடத்தில் இறந்தார். குணசேகர் படுகாயமடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசலு விசாரணை நடத்தி வருகிறார்.