ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கட்டிட தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலை (வயது 45), கட்டிட தொழிலாளி.
அதே கிராமத்ைத சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மேற்கூரை சேதமடைந்து இருந்தது. தற்போது பெய்த மழையில் அந்த மேற்கூரை ஊறிப்போய் இருந்தது.
மேற்கூரை இடிந்தது
இந்த நிலையில் அதை சீரமைக்கும் பணியில் சுடலை நேற்று முன்தினம் ஈடுபட்டார். இதற்காக அவர் ேமற்கூரையை உடைத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென்று மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் இடுபாடுகளில் சிக்கி சுடலை பலத்த காயம் அடைந்தார்.
பரிதாப சாவு
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, சுடலையை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இறந்த சுடலை குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
சுடலைக்கு பகவதி (38) என்ற மனைவியும், முத்துலட்சுமி (18) என்ற மகளும், மாடசாமி (16) என்ற மகனும் உள்ளனர்.