வைகை ஆற்றில் குளித்து மகிழும் பொதுமக்கள்

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர்.

Update: 2021-11-11 13:51 GMT
நிலக்கோட்டை:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை, முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் 3,569 கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறந்து  விடப்பட்டது. 

இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் எதிரொலியாக தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும் ஆபத்தை உணராமல், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி, பேரணை பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் வைகை ஆற்றில் பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர். துணிகளை சலவை செய்து வருகின்றனர். 

தண்ணீரின் அளவு அதிகரித்து கொண்டே இருப்பதால், பொதுமக்கள் ஆற்று தண்ணீரில் அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே நிலக்கோட்டை பகுதியில் வைகை ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதையும், சலவை செய்வதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்