தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளார்களா? என்று நேற்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஐஜி அபின் தினேஷ் மொடக் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளார்களா? என்று நேற்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஐஜி அபின் தினேஷ் மொடக் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளார்களா? என்று நேற்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. அபின் தினேஷ் மொடக் ஆய்வு செய்தார்.
ஆய்வு
தமிழகத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நெல்லை சரகத்தில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மீட்பு படை
இதன் தொடர்ச்சியாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலையில் பேரிடர் காலத்தில் தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மீட்பு படையினர் பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்தும், தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மாவட்டத்தில் மழை வெள்ளம் அதிகம் உள்ள இடங்கள், குளங்கள் மற்றும் ஆபத்தான ஆற்றங்கரை பகுதிகள் குறித்தும், வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, கார்த்திகேயன், இளங்கோவன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்