கிருஷ்ணகிரி அருகே சாராயம் விற்ற பெண் கைது
கிருஷ்ணகிரி அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு செங்கல் சூளை அருகில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சாராயம் விற்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த முனிராஜ் மனைவி ராணி (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.