தீக்காயம் அடைந்த பெண் சாவு

சேரன்மாதேவியில் தீக்காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-10 19:45 GMT
சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ஆலடித் தெருவைச் சேர்ந்த சிம்சன்ராஜ் மனைவி பிரேமா (வயது 23). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 30-ந் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த மண்ணெண்ணெய் தவறி விழுந்து தீப்பிடித்தது. இதில் பிரேமா படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்